search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு படை வீரர்"

    காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வைரலாகிவரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.

    அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

    தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு கைகள் செயல்படாத நிலையில் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



    இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை எங்களது பயிற்சிக்காலத்தில் கற்றுத்தரப்பட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு நான் உதவி செய்தேன். இந்த சம்பவம் வீடியோவாகி இப்படி பரவும் என்று எதிர்பார்த்து நான் அப்படி செய்யவில்லை என்று கூறும் இக்பால் சிங்குக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அளித்து கவுரவிக்க மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்பதை செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த பாதுகாப்பு படை வீரரின் தபால் ஓட்டை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது. #LSPolls #Postalvote #CRPFSoldier
    பெங்களூரு:

    பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

    தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

    இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote  
    காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். #JK #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

    அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

    புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled

    ×